Ilango Bharathy / 2021 ஜூலை 08 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
கிளிகளை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேகநபரொருவருக்கு 20,000
ரூபாய் அபராதம் செலுத்துமாறு, பலாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயருவன்
திசாநாயக்க நேற்று முன்தினம் (6) உத்தரவிட்டுள்ளார்.
11 கிளிகளை விற்பனை நிலையமொன்றில் காட்சிபடுத்திய பலாங்கொடை- ஹுனுகும்புர
பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அபராதத்தை செலுத்தியுள்ளார். குறித்த 11 கிளிகளும் ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த போதே, வனஜீவராசிகள் திணைக்கள
அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட கிளிகள், நீதிமன்ற உத்தரவுக்கமைய, பலாங்கொடை வனப்பகுதியில் பறக்கவிடப்பட்டுள்ளன.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026