Editorial / 2018 மார்ச் 06 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடைசெய்யப்பட்ட கிளைபோசெட் கிருமிநாசினியை விற்பனைக்காக வைத்திருந்தக் குற்றச்சாட்டில் இருவரை, கெக்கிராவை நகரில் வைத்து கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவர்களிடமிருந்து கிளைபோசெட் கிருமிநாசினியையும் கைப்பற்றியுள்ளனர்.
வலான இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக, மேற்படி அதிகாரிகள், கெக்கிராவை நகரிலுள்ள இரு வியாபார நிலையங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, வியாபாரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பொதிசெய்யப்பட்ட 100 கிராம் கிளைபோசெட் கிருமிநாசினி அடங்கிய 1467 பக்கெட்டுகளையும் மேற்படி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago