Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஷ்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற் குகைக்குள் இரண்டு சிறுத்தைகள் வாழ்ந்து வருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் தொழில் நிமித்தம் செல்லும் தொழிலாளர்கள் இந்த இரண்டு சிறுத்தைகளையும் கண்டுள்ளதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதிக்கு தொழிலுக்கு செல்லுவதற்கு தோட்ட தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கற் குகைக்குள் இருக்கும் இரண்டு சிறுத்தைகளும் தினமும் காலை வேளையில் வெளியில் வந்து போவதாகவும் இதனால் அப்பகுதிக்குச் சென்று தேயிலை கொழுந்து பறிப்பதற்கு அச்சமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை இரவு நேரங்களில் இந்த சிறுத்தைகள் கொண்டு செல்லுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் வளர்ப்பு நாய்களின் எலும்பு எச்சங்கள் காணப்பட்டன.
இந்த பகுதியில் அதிகமாக நடமாடும் சிறுத்தைகள் தொடர்பாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, இது தொடர்பாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .