Kogilavani / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட குடிசை ஒன்றை, பொலிஸார் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நான்கு பெண்களை காவத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காவத்தை உடஹவுப பிரதேச காணியில் குடியிருந்த குடும்பம் ஒன்றின் இருப்பிடம், நேற்றைய தினம் நிலவிய மோசமான காலநிலையின்போது இடிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக அவ்வீட்டுக்கு அருகில் தற்காலிகமாக தங்குவதற்காக மேற்படி குடும்பம் குடிசை ஒன்றை அமைத்துள்ளது
எனினும் இதனை விரும்பாத தோட்ட முகாமையாளர், மேற்படிக் குடும்பத்தினர் சட்டவிரோதமாகக் குடிசை அமைத்துள்ளனர் என காவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து, அவ்விடத்துக்கு வருகைதந்த பொலிஸார் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசையை அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மேற்படி குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago