Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
நோர்வூட் நகரப் பகுதிகளில் சேகரிக்கப்படுகின்றக் குப்பைகள், பொகவந்தலாவை, பாரதிபுரத்தில் கொட்டப்படுவதால், பாரதிபுரம் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, நோர்வூட் பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச சபையின் அமர்வு, அதன் தவிசாளர் ரவி குழந்தைவேல் தலைமையில், இன்று (24) காலை நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய சபையின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் சிவநேசன், மேற்படி விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தததுடன், இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்குமாறும் சபைத் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், பொகவந்தலாவைப் பகுதிக்கு என, மின் மையானம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், நோர்வூட் பிரசேசபைக்கு உட்பட்ட நகர வார்த்தகர்களுக்கு, ஒருநாள் விடுமுறை வழங்கபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேற்படி உறுப்பினரின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக, சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
11 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago