2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

குமரித் தோட்டத்தில் வீடொன்று எரிந்தது

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சாமிமலை- ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று (1)  காலை 9 மணியளவில் லயக்குடியிருப்பு ஒன்றில் தீபரவல் ஏற்பட்டதுடன், இதன்போது ஒரு வீடு முற்றாக எரிந்துள்ளது.

 24 வீடுகளைக் கொண்ட லயக்குடியிருப்பி​லே இத்தீபரவல் ஏற்பட்டதுடன், இத் தீபரவல் ஏனைய வீடுகளுக்கு பரவாமல் பிரதேசவாசிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீபரவலால் பாதிக்கப்பட்ட7 பேரைக் கொண்ட  குடும்பத்துக்கு  தோட்ட நிர்வாகம் தற்காலிகமாக வீடொன்றை  வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளது.

இத் தீபரவல் ஏற்பட்ட போது, 3 சிறுவர்கள் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு இதன்போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என  அயலிலுள்ளவர்கள்  தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X