Kogilavani / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸணா
பொகவந்தலாவை குயினா தோட்டத்தில், 11 வயது பாடசாலை மாணவி உட்பட ஐருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (வயது 51), மகன் (20), மகள் (11) ஆகியோருக்கும் வர்த்தக நிலையமொன்றைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தோட்டப் பகுதியில் கடந்த 9ஆம் திகதி 150 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் இவர்களின் பரிசோதனை முடிவுகள், இன்று (14) காலை கிடைக்கப்பெற்ற நிலையிலேயே, ஐவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளராக இனங்காணப்பட்ட மாணவி, பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் தரம் 6இல் கல்வி பயின்று வருவபர் என்றும் 20 வயது இளைஞன், போபத்தலாவை மரக்கறிப் பண்ணையில் பணிப்புரிந்து வருபர் என்றும் தெரியவந்துள்ளது.
அத்துடன் மேற்படி இருவரின் தந்தை, தோட்டத் தொழிலாளி என்றும் இவர்கள் குறித்த தோட்டப் பகுதியில் ஏற்கெனவே இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணி வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேற்படி மூவரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொகவந்தலாவை பொதுசுகாதார அலுவலகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது. மேற்படித் தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago