2025 மே 08, வியாழக்கிழமை

குயில்வத்தையில் குளவி கொட்டு: 8 பேர் பாதிப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதத் எச். எம். ஹேவா

 வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசெல்ல குயில்வத்த தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில்    தோட்டத் தொழிலாளர்கள் எண்மர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (28) மாலை 4.45 மணியளவில் இக்குழுவினர் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​  தோட்ட மரமொன்றில் கட்டியிருந்த குளவிகள் திடீரென கலைந்து கொட்டியுள்ளது.

இது குறித்து வட்வளை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, குளவி தாக்குதலுக்கு உள்ளான  இரண்டு ஆண்களும் ஆறு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என  கூறினார்.

காயமடைந்தவர்களில் 55 வயதுடைய பெண்  மேலதிக சிகிச்சைக்காக  நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X