R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
எபோட்சிலி- மொன்டிபெயார் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவரே இவ்வாறு குளத்தில் வீழ்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (01) இரவு எட்டு மணியளவில் ஹட்டன் நகரிலிருந்து இண்டு நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே, வீதியோரத்திலுள்ள குளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களையும் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குளத்தில் வீழ்ந்த இளைஞனை தேடி மீட்கும் பணியில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன்
குறித்த இளைஞன் தவறி விழுந்தாரா? கொலையா, அல்லது தற்கொலையா என பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago