Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 செப்டெம்பர் 20 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிய நபர் ஒருவர் மரத்தில் இருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த ந.கனகேஸ்வரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இறந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள கந்திஸ் மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்தார்.
குளவிகள் தாக்கிய போது மரத்தில் இருந்த நபர் பயம் காரணமாக மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குளவி தாக்குதலுக்கு இலக்கான மற்றைய நபர் லிதுலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மரத்திலிருந்து வீழ்ந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுஜிதா, கௌஷி, ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி பெருமாள்.ஆ.ரமேஸ்
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025