Editorial / 2025 ஜூன் 19 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று குளவிகளால் தாக்கப்பட்டதாகவும், 09 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உட்பட 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அதிகாரி இ.எஸ்.கே. ஜெயசூரியா தெரிவித்தார்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு கீழுள்ள பொகவந்தலாவ தோட்டத்தில், வியாழக்கிழமை (19) தேயிலை செடிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது, தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தோட்டத் தொழிலாளியின் கால் மோதியதை அடுத்து, குளவிகள் கலைந்து கொட்டியுள்ளன.
நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கூடு கட்டி உள்ளன, தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கொட்டி உள்ளமையால், தேயிலை கொழுந்து பறிப்பதை நிர்வாகம், வியாழக்கிழமை (19) நிறுத்தியுள்ளது.
4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago