Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேர் லிந்துல்ல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) அன்று மாலை 3 மணிக்கு தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம் பெற்று உள்ளது.
தலவாக்கலை நகரில் இருந்து புகையிரத வீதியூடாக சென்றவர்களில் மூன்று பேர் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் லிந்துல்ல வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய உள்ளதாக லிந்துல்ல வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலவாக்கலை புகையிரத வீதியூடாக சென்ற வேளையில் புகையிரத பாலத்தில் கட்டபட்டு இருந்த குளவி கூடு களைந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .