2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குளவி கொட்டு ; 19 பேர் வைத்தியசாலை அனுமதி

Janu   / 2025 ஜனவரி 30 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 13 மாணவர்கள் உட்பட 19 பேர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (29)  இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர், இரண்டு ஆசிரியர்கள், 13 மாணவர்கள் மற்றும் 03 பெற்றோர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாடசாலை வளாகத்தில் உள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X