2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு, செ.திவாகரன்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில்  ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிக் கொட்டியதில் சிறுவன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 

மேலும் அறுவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூவர்  சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர் .

நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த சிவபொருமாள் தில்ஷான் (வயது 16) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் குளவி கொட்டும் போது தப்பித்து ஓடுவதற்கு முயன்று  தடுக்கி விழுந்து இடத்திலேயே கடுமையான குளவி கொட்டு  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் , அவரின் சடலம் நுவரெலியா  வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X