Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
குளவிக் கொட்டுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர், சிகிச்சை பலனின்றி, பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கண்டி மடுல்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த கீதாஞ்சலி குமுதினி (வயது 54) என்பவரே, இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.
விறகுச் சேகரிப்பதற்காக சென்ற போதே, இவர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரியவருகிறது.
மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக, கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போதே, வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி பெண், மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 15 வருடங்களாக, தொண்டராசிரியையாகக் கடமையாற்றி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேதப் பரிசோதனைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago