Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 07 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ், எஸ்.கணேசன்
திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில், குளவி தாக்குதலுக்குள்ளான இருவரில் ஒருவர், நேற்று (06) உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் தொழில் மேற்பார்வையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐ.தங்கராஜ் (வயது 57) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மவுண்ட்வேர்ணன் தோட்டத்திலுள்ள தேயிலை மலையடிவாரத்தில் இருந்த குளவிக்கூடு களைந்ததால், மேற்பார்வையாளர் ஒருவரும் பெண் தொழிலாளி ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.
இதையடுத்து. அவ்விருவரும், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலபிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது, கினிகத்தேனை, தியகல பகுதியில் வைத்து, மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் உயிரிழந்தார்.
குளவித்தாக்குதலுக்கு இலக்கான மற்றைய பெண், நாவலபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்த நபரின் சடலம், நாவலபிட்டி வைத்தியசாலையில் வைத்து, பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
12 minute ago
21 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
32 minute ago
45 minute ago