2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி கணவன் பலி; மனைவி பாதிப்பு

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.கௌசல்யா, எஸ். சுஜிதா, எம். செல்வராஜா

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தில், மரக்கறித் தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இருவர் மீது, குளவிகள் தாக்கியமையால், நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில், தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி சுப்பிரமணியம் (வயது 72) என்ற நபரே, உயிரிழந்துள்ளார்.    இந்தக் குளவிக்கொட்டு தாக்குதலுக்கு இலக்கான நபரின் மனைவியும் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.  

மரக்கறித் தோட்டத்திலுள்ள மரமொன்றில் கட்டியிருந்த குளவிக்கூடே, இவ்வாறு கணவன், மனைவியைத் தாக்கியுள்ளது என்றும், சம்பவத்தையடுத்து, இருவரும் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் போது, வழியிலேயே கணவர் உயிரிழந்துவிட்டார் என்றும் ​பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்கா, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

பதுளையில்

பதுளை - தெமோதரை பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளைப் பார்வையிடவந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் 22 பேர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில். தெமோதரை, பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

பதுளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வெளிநாட்டைச் சேர்ந்த அறுவரும், ஆபத்தான நிலையில் இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேரும் உள்ளூரைச் சேர்ந்த 12 பேருமாக மொத்தம் 22 பேர், தெமோதரையின் வரலாற்று ரீதியிலான இடங்களையும் தெமோதரைப் பாலத்தையும் பார்வையிட்டுவதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது, இந்தக் குளவித்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  

இது தொடர்புடைய விசாரணைகளை் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .