2026 ஜனவரி 21, புதன்கிழமை

குழந்தைகளைத் தாக்கிய தந்தை கைது

R.Maheshwary   / 2021 ஜூலை 18 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

தனது குழந்தைகள் இருவரையும் மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய தந்தையொருவர் புத்தல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தல- உடகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மதுபோதையில் வீட்டுக்கு வந்து, தனது  6 மற்றும் நான்கரை வயதான குழந்தைகள் இருவரையும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு குழந்தைகளும் வைத்திய பரிசோதனைக்காக, புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X