2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குழந்தையின் உடல் நல்லடக்கம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல்நலக் குறைவால், செவ்வாய்க்கிழமை (28) உயிரிழந்த கலஹா, தெல்தொட்டை பிரதேசத்தை சேர்ந்த சங்கர் சஜித் என்ற 2 வயது ஆண் குழந்தையின் சடலம், இன்று (30) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீட்டுத் தோட்டத்திலேயே, சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலத்தின் போது, கறுப்பப் பட்டியணிந்து கலந்துகொள்வதாக பிரதேச மக்கள் அறிவித்திருந்த போதிலும், பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தனர்.

மேலும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், கலஹா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர், குழந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

குழந்தையின் இறுதி உர்வலத்தில் குழப்பம் ஏற்படலாம் என்று கருதி, கலஹா நகரில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும், அமைதியான முறையில் குழந்தையின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதென, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

உடல்நலக் குறைவு காரணமாக கலஹா வைத்தியசாலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, வைத்தியர்களின் அலட்சியப்போக்கால் பரிதாபகரமாக உயிரிழந்தது என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரதேச மக்கள், கலஹா வைத்தியசாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலைக்கும் சேதம் விளைவித்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இச்சம்பத்தையடுத்து, கலஹா வைத்தியசாலை தற்போது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்; சுரங்க ரஜநாயக்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X