2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குழிக்குள் சிறுத்தை: பாய்ந்தவரை விராண்டியது

Editorial   / 2023 மே 24 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஞ்சித் ராஜபக்ஷ, கௌசல்யா

ஆழமான குழி​யொன்றுக்குள் விழுந்த சிறுத்தை மீட்பதற்காக அக்குழிக்குள் இறங்கியவரை அந்த சிறுத்தை விராண்டிய சம்பவமொன்று கொட்டகலையில், புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை, ட்ரேட்டன் தோட்டத்தில் வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள் சிறுத்தையொன்று விழுந்துவிட்டது. அதனை மீட்க முயன்றவரையே அந்த சிறுத்தை தாக்கியுள்ளது.

சிறுத்தையொன்று குழிக்குள் விழுந்த சம்பவம் தொடர்பில் திம்புள்ளை-பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  அதன்போது, கடும் போதையில் இருந்த நபரொருவர், சிறுத்தையை மீட்க முயன்ற போதே, சிறுத்தை விராண்டியுள்ளது. இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான அந்த நபர் கொட்டகலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுத்தையை குழிக்குள் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.  

காயமடைந்த நபர், பூண்டுலோயாவைச் சேர்ந்தவர் என்றும் திருமண வீடொன்றுக்காக கொட்டகலைக்கு வந்துள்ளார் என்றும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X