2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

குவைட் முதலாளியுடன் மனைவி : ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ

Editorial   / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் தனது முதலாளி மற்றும் சாரதியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அவ்விருவரும் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கியும் உள்ளனர்.

இதனால்,  மனைவிக்கும் கணவனுக்கும் இடையில்   மனக்கசப்பு ஏற்பட்டது. கடும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த கணவன், மனைவியை தாக்கியுள்ளார்.   சனிக்கிழமை  (30) வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குவைட் முதலாளி, அவருடைய சாரதி கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான  கணவரின் தந்தையின் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வீதி, வெலிபோதாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 வயதுடைய இந்தப் பெண், குவைத்தில் பணிபுரிந்து வந்த தனது முதலாளியான 80 வயதான அப்துல் சைட் ஆலபல்லாயன் மற்றும் அவரது சாரதி கே.கே.நாமல் ஆகியோருடன் வீடு திரும்பியுள்ளார்.

இதற்கு முன் பலமுறை அவ்விருவருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.இதுகுறித்து கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (30) கடும் கோபமடைந்த  கணவன், மனைவியை தாக்கி அவருடன் வந்த குவைத் நாட்டவர் மற்றும் டிரைவரை தாக்கி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

குவைத் நாட்டைச் சேர்ந்தவர், சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கிருந்த 70 வயது சுகயீமடைந்திருந்த கணவரின் தந்தையான திஸ்ஸ ஹெட்டியாராச்சி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை பிபில பதில் நீதவான் திரு.சரத் பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) நடைபெறவிருந்தது.

கணவன்தான் வீட்டுக்கு தீ வைத்தாரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவைட் நாட்டைச் சேர்ந்தவரை விசாரிப்பதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவி பெறப்பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X