Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 29 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதைவிட இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பினர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அலரிமாளிகைக்குச் சென்று முன்னெடுத்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடன் இருந்தமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
700 ரூபாய் போதுமானதல்ல, குறைந்தது 1000 ரூபாயே எமது கோரிக்கை. இதில் எவ்வித மாற்றமுமில்லை. சம்பள அதிகரிப்பு ஊடாக அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியாதெனின் அதற்கான மாற்றுத்திட்டத்தைக் கொண்டு வரவும். இதில் அரசாங்கம் இவ்வளவு நாள்களும் தலையிடாமல் இருந்தமைக்கான காரணம் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.
இந்த நேரத்தில் நாடுபூராகவும் இந்தச் சம்பள அதிகரிப்புக்காகப் போராடும் மக்களுடன் நாமும் கைகோர்ப்போம். இது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago