2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கூட்டொப்பந்தம் தொடர்பான இரண்டாவது கலந்துரையாடல் ஹட்டனில்

Editorial   / 2018 ஜூன் 05 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தகால கூட்டொப்பந்தங்களைப்போல, இம்முறை கைச்சாத்திடப்பட உள்ள கூட்டொப்பந்ததிலும் மலையக மக்கள் ஏமாற்றப்படாமலிருக்க மலையக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மலையக சமூக ஆய்வு மையம், மலையக இளைஞர்களை நேரடியாக சென்று சந்தித்து கலந்துரையாடி வருகின்றது.

கொழும்புவாழ் மலையக இளைஞர்களை, கடந்த மாதம் 29 ஆம் திகதி வௌ்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதன் முதலாவது கூட்டத்தில் சந்தித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கூட்டொப்பந்தம் தொடர்பான மலையக சமூக ஆய்வு மையத்தின் இரண்டாவது கலந்துரையாடல் ஹட்டனில் எதிர்வரும், சனிக்கிழமை (09) காலை 10 மணிக்கு வெஸ்டர் சர்வதேச பாடசாலை மண்டபத்தில்   இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவில் அமைப்புகள் மற்றும்  மலையக சமூக ஆர்வலர்கள்  அரசியல் சாரா  நண்பர்கள் அனைவரையும் ஹட்டனில் நடைபெற உள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ள மலையக  சமூக ஆய்வு  மையம்  அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இக்கலந்துரையாடல் குறித்த தகவல்களுக்கு 0766870891, 0729815534 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புக்கொள்ளலாம் எனவும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X