2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கூரையின் மேலே முளைத்திருக்கும் மரம்

Freelancer   / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் பிரதான பஸ் நிலையத்தின் தனியார் பஸ் நிறுத்துமிடத்துக்கு மேலே இருக்கும் கட்டடத்தின் கூரையில் மரமொன்று முளைத்துள்ளது. அதன் வேர்கள், கூரைக்கு கீழே தொங்குகின்றன. 

இதனால், அனர்த்தங்கள் பல ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகுமென பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூரையின் பீலிகளில் வேர்கள் ஊடறுத்துச் சென்றுள்ளன. ஒருசில வேளைகளில் அந்த பீலியுடன் மரம் விழுந்தாலும் விழக்கூடும் என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர். 

கூரைக்கு மேல் மரம் முளைத்திருப்​பது தொடர்பில் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் கவனத்துக்கு பல முறை கொண்டுவந்த போதிலும், எவ்விதமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்றும், தகவல் கொடுத்த சிலர் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X