2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

கெம்பியன் தோட்டத்தில் 20 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்

Kogilavani   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட கெம்பியன் தோட்டத்தில், இருபது குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன என்றும் இந்தக் குடும்பங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றுமாறும் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச்செயலாளருமான ப.கல்யாணகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்படிப் பகுதியில், மிகவும் பழைமைவாய்ந்த லயன் குடியிருப்பில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், லயன் குடியிருப்புக்குப் பின்னால் பாரிய மண்சரிவு அபாயம் நிலவுகிறது.
மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள லயன் குடியிருப்புப் பகுதியை, நேற்று (14) நேரில் சென்று பார்வையிட்டபோதே, பிரதேச சபை உறுப்பினர் கல்யாணகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி அவர்களது உயிரையும் உடமைகளையும் பாதுகாக்குமாறும் அவர் சம்பந்தப்பட்டத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் அம்பகமுவ பிரதேச செயலகம், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் கவனத்துக்கும் அவர் கொண்டுசென்றுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X