2025 மே 12, திங்கட்கிழமை

கொத்மலை பெண்: குருதெனியவில் சடலமாக மீட்பு

Editorial   / 2023 ஜூலை 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் குருதெனிய பிரதேசத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் திங்கட்கிழமை (24) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொத்மலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் (வயது 43) என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

லெவெல்ல பிரதேசத்தில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்த இவர் வீட்டில் இருந்து காணாமல் போனதாகவும் பொலிஸில் கடந்த 21ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் பேராதனை முருதலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருவதாகவும், குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்தமையினால் லெவெல்ல பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர் வீட்டு வேலையாளாக வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X