2025 ஜூலை 23, புதன்கிழமை

கேகாலை புவக்தெனிய வித்தியாலயம் அபிவிருத்தி

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலையாக விளங்கும் ரம்புக்கனை புவக்தெனிய வித்தியாலயத்தை, முழுமையாக அபிவிருத்திச் செய்வதற்கு, சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில், 92 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மேற்படி பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டடத்தொகுதி, நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு, சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 16 இலட்சம் ரூபாய் செலவில் மேற்படி பாடசாலையில் அமைக்கபடவுள்ள விளையாட்டு மைதானத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகளும், நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அனந்த மில்லன்கொட, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .