Ilango Bharathy / 2021 ஜூன் 25 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
"நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதில்
நல்ல நோக்கம் இருந்தது" என தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின்
தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
வே.இராதாகிருஷ்ணன், தற்போது இந்த அரசாங்கத்தில் 16 பேர்
விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதன் பின்னணியில் அரசியல் உள்ளது என்றார்.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று (24) கருத்து
வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் அறிவிப்பு விடுத்து இரு நாட்களில்
கைதிகளின் விடுதலை இடம்பெறுகின்றது. எனவே தமிழ் மக்கள் மீதுள்ள
அக்கறையில் அவர்களை விடுத்திருந்தால் வரவேற்போம் என்றார்.
அத்துடன், நாட்டில் தொழிலாளர்களுக்கென சட்டம் உள்ளது. சர்வதேச
சமவாயங்களும் உள்ளன. எனினும், ஆயிரம் ரூபா சம்பள உயர்வின் பின்னர் தோட்ட
நிர்வாகங்களும், முகாமையாளர்களும் தன்னிச்சையாக, சர்வாதிகாரிபோல்
செயற்படுகின்றனர்.
20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் காட்டுச் சட்டத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் இது குறித்து
கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட 5
நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று குறிப்பிட்டார்.
"ஏனைய நிறுவனங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. எது எவ்வாறு அமைந்தாலும் தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்துக்குமிடையில் ஒப்பந்தமொன்று இருப்பதே சிறப்பு" என்றார்.
"தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை
தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பிப்பதற்கு 5 தோட்ட நிறுவனங்கள்
இணக்கம் தெரிவித்துள்ளன என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
ஏனைய நிறுவனங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றன.
எனவே, கூட்டு ஒப்பந்தத்தை மீள கைச்சாத்திடுவதே சாலச்சிறந்ததாக அமையும்"
என்று தெரிவித்தார்.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago