2025 மே 14, புதன்கிழமை

கைத்துப்பாக்கியுடன் நோர்வூட்டில் ஒருவர் கைது

Editorial   / 2023 மார்ச் 14 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஸ்

கைத்துப்பாக்கியை தன்னுடைய உடலில் மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் வசிக்கும் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேற்படி நபர், காலி பூஸ்ஸ இராணுவ முகா​மில் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர் என்றும் தெரியவருகின்றது.

அந்த இராணுவ முகாமில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் தப்பிய இராணுவ வீரர், வெஞ்சர் தோட்டத்தில் வீடொன்றில் தங்கியிருந்து சாரதியாக கடமையாற்றுகின்றார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கைத்துப்பாகிக்கான மெகசின் இல்லை என்றும், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

  கைத்துப்பாக்கி கிடைத்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இராணுவத்தினர், இதுதொடர்பில் மஸ்கெலியா, லக்ஷ்பான இராணுவ முகாமின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X