2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

கொங்கீறிட் கழிவு நீர் நிரம்பி விழுந்ததில் மாணவன் மரணம்

Freelancer   / 2024 ஏப்ரல் 05 , மு.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலிய – காத்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கீறிட் கழிவு நீர் நிரம்பியொன்று வீழ்ந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

தேயிலை தோட்டமொன்றின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்த கொங்கீறிட் கழிவு நீர் நிரம்பி கொண்டு வரப்பட்டு, பாடசாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வைக்கப்பட்டிருந்த கொங்கீறிட் கழிவு நீர் நிரம்பியே மாணவன் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலசலகூடத்திற்கு வருகைத்தந்த மாணவன் மீது இந்த கொங்கீறிட் கழிவு நீர் நிரம்பி வீழ்ந்துள்ளதுடன், மாணவன் மலசலகூட கட்டிடத்தில் சிக்குண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

காத்மோர் பகுதியைச் சேர்ந்த 11 வயதான எஸ்.அனிக்ஸன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X