2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

கொட்டகலை மக்களுக்கு அசுத்த நீரே குடிநீர்

கு. புஷ்பராஜ்   / 2020 மே 10 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை நகர் பிரதேசத்திலுள்ள 1,200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் குடிநீர், கடந்த 3 மாதகாலமாக, மஞ்சள் நிறத்துடன் வழங்கப்படுவதாகவும் அந்நீர் துர்நாற்றம் வீசுவதால், இந்நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு, நோய்கள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளர்.

கொட்டகலை இருந்து சுமார் 7 கீலோ மீற்றர் தொலைவிலுள்ள பிட்டவின் பகுதியிலிருந்து கொட்டகலை நகருக்கு தேவையான குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் கடந்த காலங்களில் இந்நீர் தூய்மையாகவே இருந்தது என்றாலும், கடந்த 3 மாதங்களாக அசுத்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த நீர் மூலங்களைப் பெற்றுக்கொள்ளும் பகுதிக்கு மேலாக, நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் முன்னடுக்கப்படுவதாகவும் அத்துடன், சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சில பகுதிகளை மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்துவதாகவும் எந்தவொரு பாதுகாப்பும் இன்றியே, இந்நீர் குடிநீருக்காக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு, இலங்கை நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையால் பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடப்படுவதாகவும் எனவே, இதைச் சுத்தமாக பாதுக்காக வேண்டியது அவர்களது கடமை என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, உரிய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுத்தமாக குடிநீர் தங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்பதை, அதிகாரிகள் கவத்தில் கொள்ளவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .