2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொட்டகலையில் எரிபொருள் மோசடி அம்பலம்

R.Maheshwary   / 2022 ஜூலை 27 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொட்டகலை எரிபொருள் கூட்டுதாபன களஞ்சியசாலையின் உயர் அதிகாரியொருவர்,  எரிபொருள் விநியோக வாகனத்தைப் பயன்படுத்தி எரிபொருள் மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக எரிபொருள் பௌசர் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

கொட்டகலை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்கான சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் போது, குறித்த அதிகாரி பல வெற்றுக்கொள்கலன்களை அந்த வாகனத்தில் அனுப்புவதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள தாங்கிகள் நிரப்பப்பட்டதன் பின்னர், குறித்த வாகனங்களில் அனுப்பப்படும் வெற்று கொள்கலன்களுக்கு நிரப்பப்பட்டு சாரதிகளே அதனை கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு கையளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் வினவியபோது, அந்த அதிகாரி தம்மிடம் ஒப்படைக்கும் கொள்கலன்களை அவரே மீண்டும் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .