Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 27 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல், திம்புள்ள - பத்தனை பொலிஸாரால் நேற்று (26) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள - பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட நடவடிக்கைக்காக அவர் இன்று (27) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
" நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது." என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago