2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கொட்டியாகலையில் மூவருக்கு கொரோனா

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பொகவந்தலாவ, கொட்டியாகலை பகுதியில் மேலும் மூவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 2ஆம் திகதியன்று, இரண்டாவது தடவையும் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் சுற்று பரிசோதனையில் வைரஸ் தொற்றவில்லை என்ற முடிவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்ட நபரொருவர், அண்மையில் கொட்டியாகலை பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த உறவினர்கள் மூவருக்கே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X