2025 மே 14, புதன்கிழமை

கொத்மலை விபத்து: நிதி அனுப்பிவைப்பு

Editorial   / 2025 மே 14 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி,  சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படுவதோடு அந்தப் பணம் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

விபத்தில் உயிரிழந்தவர்கள்  வாழ்ந்த  திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனாகொடுவ, படுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனாதவில்லுவ, சிலாபம், புத்தள, தனமல்வில, வெல்லவாய மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .