2025 மே 14, புதன்கிழமை

கொத்மலை விபத்து: மரண எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு

Editorial   / 2025 மே 14 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஷ

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில்  இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் புதன்கிழமை(14) காலை உயிரிழந்ததாக கொத்மலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் நுவரெலியாவில் உள்ள ஆதார வைத்தியசாலைகளிலும், பேராதனை மற்றும் கண்டியில் உள்ள போதனா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .