2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனா செய்தித் துளிகள்

Kogilavani   / 2021 மே 06 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படுவதைக் கருத்திற்கொண்டு  பண்டாரவளை பிரதேச செயலகம், பண்டாரவளை பிராந்திய தேயிலைச் சபைன என்பன மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

கேகாலை  மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,705ஆக அதிகரித்துள்ளது.  தெஹியோவிட்ட சுகாதார அதிகாரி பிரிவில் மாத்திரம் 849 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் இதுவரை 17 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 2299 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 ஊவா மாகாணத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரொனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, கொவிட் 19ஐ தடுப்பதற்கான செயலணியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை நாவுல நகர் முடக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை விற்பனை நிலையங்களில், அரிசி உள்ளிட்ட அத்தியாசியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் குற்றஞம்சாட்டியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2129ஆக உயர்வடைந்துள்ளது.

மொனராகலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு, பிரதேசத்தின் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் 8 சலவை இயந்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X