2025 மே 08, வியாழக்கிழமை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் செயற்குழுக் கூட்டம்

Editorial   / 2020 நவம்பர் 05 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பதுளை மாவட்ட கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்குழுவின் கூட்டம், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்  தலைமையில் பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய உணவுப்பொதிகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளது.

அதற்காக, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விவரங்களை உடனடியாக சேகரித்து, எதிர்வரும் நான்கு தினங்களுக்குள், குறித்த உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை முன்னெடுக்குமாறு, மாவட்ட செயலாளருக்கு, ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, பதுளை மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்பதிவுகளை உடனடியாக இரத்துச் செய்யவும், இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை எவ்வித அவசர நிலைமைகளின்போதும் முகங்கொடுக்கத் தேவையான வைத்தியசாலை வசதிகள், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஆலோசனைகள், கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டல், வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் தோட்ட விவசாய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள், ஊரடங்கு அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X