Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.தி பெருமாள்
மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த சிசு, கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளது.
பிரசவத்துக்காக அப்பெண், டிக்கோயா-கிளங்கன் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
பெண்ணின் கணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவ்விருவரும் ஒரே வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அப்பெண், ஆண் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார். அச்சிசு இறந்துவிட்டது. சிசுவுக்குச் செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அதிகாரி நரேந்திர குமார் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago