2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொலைசெய்து சடலத்தை வாவியில் வீசியவர் கைது

பாலித ஆரியவன்ச   / 2018 ஜூன் 25 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவரைக் கொலைசெய்து, அவரது சடலத்தை உரப் பையில் கட்டி, மஹியங்கனை - வியன்னா வாவியில் வீசியெறிந்தாரெனக் கூறப்படும் சந்தேகநபரொருவர், நேற்று முன்தினம் (24), மஹியங்கனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெசல்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 47 வயதான நபரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதியன்று, வியன்னா வாவியில் உர​ப்பை ஒன்று மிதப்பதாக, பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, குறித்த சடலம் மீடகப்பட்டதாகவும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கெசல்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் அடையாளம் காணப்பட்டாரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரும் உயி​ரிழந்த நபரும், ஒன்றாக மதுபானம் அருந்தியபோது, இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கைகலப்பாக மாறியதெனவும் இதனையடுத்து, சந்தேகநபர் மற்றைய நபரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாரெனவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பின்னர், கொலையுண்டவரின் சடலத்தை, உரப்பையில் கட்டி வாவியில் வீசியதாகவும், சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரை, மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X