2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றவர் வைத்தியசாலையில்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை- மரியவத்த மூன்றாம் குறுக்குத்தெரு பகுதியில் நடந்துச் சென்ற ஆசிரியர் ஒருவரின் தங்க மாலையைப் பறித்துக்கொண்டு, ​மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் சந்தேகநபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பளை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பரிவின் பொறுப்பதிகாரி   எம்.ரிஸ்வியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 பாடசாலை நிறைவடைந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த ஆசிரியை வழிமறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது ஹெரோய்ன் சுற்றிவளைப்புக்காக அந்த பகுதிக்குச் சென்றிருந்த பொலிஸ் அதிகாரி, நகையை பறித்துச் சென்ற சம்பவம்  தொடர்பில் அறிந்து, கொள்ளையர்களை கம்பளை- கண்டி வீதியில் ஓட்டோவில் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் போத்தலபிட்டிய பகுதியை அண்மித்த போது, குறித்த பொலிஸ் அதிகாரி கொள்ளையர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் மீது, ஓட்டோவை செலுத்தி சந்தேகநபர்களை தடுத்து, அவர்களை கைதுசெய்ய முயற்சித்துள்ளார்.

அத்துடன் அவர்களுக்கு விலங்கிடுவதற்காக அயலவர்களையும் உதவிக்கு அழைத்துள்ள போதிலும் எவரும் உதவி செய்வதற்கு முன் வரவில்லை என தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் ஹெல்மட்டால் பொலிஸ் அதிகாரியை கடுமையாகத் தாக்கியதால் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .