2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர் திடீர் மரணம்

Janu   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பெனியின் கீழ் இயங்கும் நானுஓயா ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தில்  தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர்  சனிக்கிழமை (6) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நானுஓயா ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மூக்கையா சிவமூர்த்தி (வயது 59) என்ற தொழிலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (6) அன்று குறித்த நபர் ஒரு பெயருக்கு (ஒரு நாள் சம்பளம்) தேயிலை செடிகளுக்கு உரம் இட சென்று பின்னர் மாலை மேலதிகமாக கொழுந்து பறிக்க சென்று கொழுந்து பறித்து அதை நிறுக்க சென்றபோது பெயருக்கு நிலுவை போதாமையால் மீண்டும் தேயிலை மலைக்கு சென்று தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்துள்ளார்.      

தேயிலை கொழுந்து நிறுக்கும் இடத்திற்கு குறித்த நபர் மிக நேரமாகியும் வருகை தராததால் ஏனைய தொழிலாளர்கள் அவர் கொழுந்து பறித்த இடத்தை நோக்கி சென்றபோது  அவர் சடலமாக கிடப்பதை கண்டுள்ளனர்.   

பின்னர் இது தொடர்பாக நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் ஞாயிற்றுக்கிழமை  (7) அன்று  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 பி.கேதீஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X