2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொவிட் தடுப்பூசிகளுக்கு நன்றி தெரிவிப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு, மகாநாயக்க தேரர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ், ஆலோசகர் கவுஸ்லேந்திர குமார் ஆகியோர்,  கண்டியிலுள்ள மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக்கொண்டனர்

மல்வத்து  மகா நாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்களத் தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. வேன்டருவே உபாலி தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டணர்.

இதன்போதே மகாநாயக்க தேரர்கள், இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள கொவிட் 19 தடுப்பூசிகளுக்காக நன்றியைத் தெரிவித்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X