Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஐந்து பேரை,
பொகவந்தலாவ பொலிஸார் நேற்று முன்தினம் (15) கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ- ஓல்டி தோட்டம் மற்றும் கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டப் பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கசிப்பு உற்பத்திக்காக பயன் படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார்
கைபற்றியுள்ளதோடு, சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு இலட்சம் மில்லி லீற்றர் கோடாவையும்
கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரையும் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .