R.Maheshwary / 2021 நவம்பர் 30 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டில் ஒரு நாளைக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தும் நிலையில், 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பானது, இம்மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
காலை வேலையிலும், இரவு வேளையிலும் அவர்களுக்குரிய நேரத்திற்கு ஏற்ப கோதுமை மாவினை பயன்படுத்தியே அவர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்து கொள்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், குறைந்த சம்பளம் பெரும் இவர்கள் தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலை காரணமாக, தாங்கள் மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதாகவும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இன்று தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன்காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரத்தை நலன் கருதி, கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும், பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jan 2026