2025 மே 12, திங்கட்கிழமை

கோராவின் உயிரிழப்புக்கு புற்றுநோயே காரணம்

Editorial   / 2018 மே 31 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் பிரிவிலிருந்த ‘கோரா’ என்றழைக்கப்படும் மோப்பநாய் உயிரிழந்தமைக்கு புற்றுநோயே காரணமென, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேற்படி மோப்ப நாயானது, மத்திய மாகாணத்தில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு, பயிற்சிக்காக அழைத்துச் சென்றபோது, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரியவந்துள்ளது.

எட்டு வயதுடைய கோரா, ஹட்டன் பொலிஸ் வலயத்தில் கடந்த முன்று வருடங்களாக சேவை புரிந்துள்ளது.  சிவனொளி பாதமலை பருவகாலத்தில், போதைப்பொருட்களுடன் மலைக்குச்செல்வோரை இனங்கண்டு, அவர்களைக் கைதுசெய்வதற்கு, கோரா பலவகையிலும் உதவியமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கோரா, மட்டக்களப்பு, அம்பாறை, பேலியகொடை மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் சேவைபுரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொலிஸ் மரியாதையுடன் கோராவின் இறுதிச்சடங்கு, ஹட்டனில் இன்று (31) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X