Freelancer / 2023 மார்ச் 02 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மலையக பகுதிகளில் உள்ள அனைத்து நகரங்களிலும் கோழி முட்டையின் விலை அதிகரித்து உள்ளதால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் 44 ரூபாய் முதல் 46 ரூபாய் வரையிலான விலைக்கு கோழி முட்டை ஒன்றை விற்பனை செய்ய வேண்டுமென விலை நிர்ணயம் செய்துள்ள போதும் பல நகரங்களில் பல்வேறு விலைக்கு விற்கப்படுகிறது என நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.
இறைச்சி வகைகள் உண்ணும் அளவுக்கு தங்களுடைய பொருளாதாரம் இல்லையெனத் தெரிவிக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள், பாடசாலைக்குச் செல்லும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்க சத்து நிறைந்த முட்டைகள் வாங்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளில் முட்டைகள் விலை பற்றி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுகர்வோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago