2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கோழிக் கூட்டுக்குள் சிக்கிய சிறுத்தை

Freelancer   / 2021 நவம்பர் 07 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ 

கோழிக் கூடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தையொன்றை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரையின் பேரில் தோட்ட தொழிலாளர்கள் குழுவொன்று விடுவித்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா ஹாட்லி தோட்டத்திலுள்ள தோட்ட வீடொன்றில் வளர்த்து வந்த கோழிகளை வேட்டையாடுவதற்காக வெள்ளிக்கிழமை (05) இரவு கோழிக் கூட்டின் தரைத் தளத்துக்குள் சிறுத்தை நுழைந்துள்ளது.

கூட்டுக்குள் சிறுத்தை சிக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பில், நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, வனவிலங்கு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சிறுத்தை சிக்கியிருந்த கோழிக் கூட்டின் கதவை திறந்ததையடுத்து, சிறுத்தை அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளது.
 
நன்கு வளர்ந்த சிறுத்தைகள் தேயிலைத் தோட்டத்தில் நடமாடுவதாகவும், இரவு நேரங்களில் வீடுகளுக்கு அருகில் வந்து நாய், கோழிகளை வேட்டையாடுவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X