Freelancer / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை லுணுகல கதிரவேலாயுதம் கோவிலில் உள்ள தெய்வச் சிலையொன்றில் 4 தங்க நாணயங்கள் மற்றும் கோவில் உண்டியலை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இந்த ஆலயத்தின் காவலாளி திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர்.
காவலாளியான எஸ்.ரட்ணசிங்கம் (வயது 53) என்பவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்றையதினம் காலை பூஜைக்காக ஆலயத்தின் கதவை திறந்து பார்த்த போது, தங்க நாணங்கள் மற்றும் உண்டியல் இல்லாததைக் கண்டு ஆலயக் காப்பாளர், லுணுகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் விசாரணைகளுக்காக பதுளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிவ் என்ற உத்தியோகபூர்வ பொலிஸ் நாயின் உதவியையும் பெற்றுள்ளனர்.
சிலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஓடிய கிவ் பொலிஸ் நாய், பின்னர், காவலாளி தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்தது. அவ்வீட்டைச் சோதனையிட்டபோது, கோயிலில் இருந்து திருடப்பட்ட சில்லறைகள் சிலவும், இரண்டு தங்க நாணயங்களும் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரியவன்ச
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago