2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கௌரவிப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இந்தியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில், வெள்ளி பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை சேர்த்த சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளும் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கௌரவிப்பு விழா, இன்று(25) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

22 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நதிஷா தில்ஹாணி லேகம்கே,  ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும், கேகாலை மாவட்டத்தை சேர்ந்த ருமேசிகா குமாரி ரத்ணாயக்க 200 மீற்றர் ஓட்டப்போட்டியில், வெள்ளி பதக்கத்தையும் பெற்று இலங்கை நாட்டுக்கும் சப்ரகமுவ மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

மேற்படி இருவரும், சப்ரகமுவ மாகாண விளையாட்டத்துறை அமைச்சால் கௌரவிக்கப்பட்டதுடன் இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய்  வீதம் வழங்கப்ட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் அதுலகுமார ராகுபந்த, இதற்காகான காசோலைகளை கையளித்தார்.

இந்நிகழ்வில், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தேவப்பிரிய விஜயராஜா, மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் தம்மிகா, அமைச்சின் இணைப்பதிகாரி ஹசன் உட்பட இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் விளையாட்டுத்துறை பணிப்பாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X